Wednesday, 25 April 2012

Resistive தொடுதிரை மற்றும் Capacitive தொடுதிரை வித்தியாசங்கள்


Resistive and Capacitive Touchscreen Difference in Tamil:
Capacitive தொடுதிரை மற்றும் Resistive தொடுதிரை நாம் அதிகமாக பயன்படுத்தும் தொடுதிரை சாதனங்கள். இதை தவிர infrared தொடுதிரை ஒன்று உள்ளது. ஆனால் infrared தொடுதிரை அதிக பயன்பாட்டில் இல்லை. Capacitive தொடுதிரை மற்றும் Resistive தொடுதிரை இவை இரண்டுமே தனி தனி விதிகள் கீழ் செயல்படும். இவை இரண்டிலுமே சாதகங்கள் மற்றும் பாதகங்கள் இருகின்றன. 


Capacitive தொடுதிரை:
Capacitive தொடுதிரை மின்னூட்டம் (electric Charge) அடிப்படையில் செயல்படுகிறது. Capacitive தொடுதிரை ஒரு கண்ணாடியால் உருவாக்கப்பட்டது. அந்த கண்ணடியில் மின்னூட்டம் காணப்படும். மனித உடம்பு  மின்னூட்டம் சேகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் நீங்கள் அந்த மொபைல் ஸ்க்ரீன் டச் செய்யும் பொது Capacitive தொடுதிரையில் உள்ள மின்னூட்டம் உங்கள் விரலை நோக்கி செல்லும். மின்னூட்டம் அந்த இடத்தில இப்போது குறைவாக இருக்கும். அந்த மின்னூட்டம் குறைவான இடத்தில் தொடுதிரை செயல்படும். 


நன்மை:

  • பல தொடுதல் (multi touch) ஆதரவு
  •  சூரிய ஒளியில்  நல்ல தெரிதல்
  • மிகவும் நுட்பமான வடிவமைப்பு தொட்ட உடன் செயல்படும்
  • தூசி துகள்கள் வாய்ப்புகள் இல்லை
  • பளபளப்பான தோற்றம் 



 குறைபாடு:

  • 5% ஈரப்பதம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த தொடுதிரை உபயோகபடுத்த முடியாது 
  • அதிக விலை 





Resistive தொடுதிரை:
Resistive தொடுதிரை மூன்று அடுக்கு கண்ணாடியால் உருவாக்கப்பட்டவை. அதில் முதல் அடுக்கு மற்றும் கடைசி அடுக்கை conductance அடுக்கு என்று அழைப்பார்கள். நடுவில் உள்ள அடுக்கு resistive  அடுக்ககும்.  நீங்கள் தொடுதிரையை அழுதும் பொது அணைத்து அடுக்கிலும் அழுத்தம் உண்டாகி மின்னூட்டம் ஏற்படும். அந்த இடத்தில தொடுதிரை செயல்படும்.


நன்மை:

  • மலிவான தொடுதிரை
  • ஈரப்பதம் எந்த அளவில் இயங்க முடியும்
  • மிகவும் துல்லியமாக தொடலாம் 



 குறைபாடு:

  • பல தொடுதல் (multi touch) ஆதரவு இல்லை
  •  துல்லியமாக  செயல்படுவதால் கொஞ்சம் கவனம் தேவை 
  • சூரிய ஒளியால் மங்கலாக தெரியும் 

No comments:

Post a Comment