ப்ளாக்பெர்ரி மொபைல் என்றால் ஒரு தனி மரியாதையை தான். நம் எதிரே எவராவது ப்ளாக்பெர்ரி வைத்திருந்தால் அவரை ஓர கண்ணில் பார்த்தே ஒரு வழி பண்ணிவிடுவோம். ஆனால் இப்பொது ப்ளாக்பெர்ரி மொபைல் விற்பனை டல் தான். எப்போது இந்த அண்ட்ராய்டு மொபைல் கால் அடி எடுத்து வச்சதோ அப்போவே ப்ளாக்பெர்ரி கம்பெனி-கு ஆப்பு வச்ட்டாங்க. இந்த நிலைமைல ரிலீஸ் பண்ண மொபைல் தான் ப்ளாக்பெர்ரி கர்வ் 9360. இந்த மொபைல் வாங்குனவங்க பல விதமா விமர்சனம் செஞ்சுர்காங்க. பிசினஸ் பண்றவங்க இந்த மொபைல் நல்ல பயனுல்லதா இருக்கு என்று சொல்றாங்க. மின் அஞ்சல் நிறைய அனுபுரவங்களுக்கு இந்த மொபைல் பயன்படும். காலேஜ் பசங்களுக்கு இந்த மொபைல் ஒத்து வராது. இந்த மொபைல் இன்டர்நெட் வசதிக்காக டிசைன் செஞ்சது. BBM சேவை அற்புதம்.
ப்ளாக்பெர்ரி கர்வ் 9360 முக்கிய அம்சம்:
- பிளாக்பெர்ரி 7 OS
- 5 எம்.பி. கேமரா
- 2.44-அங்குல டிஎஃப்டி எல்சிடி திரை
- 800 மெகா ஹெர்ட்ஸ் பிராசசர்
- குவெர்டி கீபேட்
- 2G மற்றும் 3G நெட்வொர்க் ஆதரவு
- Wi-Fi இயக்கப்பட்டது
- 32 ஜிபி சேமிப்பு கொள்ளளவு
இந்த மொபைல் விலை 18,770 ருபாய். மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு மொபைல் வேண்டும் என்று நினைத்தாள் இந்த மொபைல் தேர்வு செய்யலாம்.
No comments:
Post a Comment